நியூசிலாந்தின் முன்னாள் பிரதமருக்கு உயரிய விருது

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான டேன் கிராண்ட் கம்பானியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரைவாதத் தாக்குதலின்போது, அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காகவே இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமராக கடமையாற்றிய இவர், உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயதுப் பெண் என்னும் பெருமையைப் பெற்றார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் தாம் பதவியிலிருந்து விலகுவதாக, ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென அறிவித்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply