உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா என்னும் அணைக்கட்டு, ரஷ்ய படைகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால், அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.
இதனையடுத்து, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ககோவ்கா அணைக்கட்டின் மீது நடத்தப்பட்ட குறித்த தாக்குதலின் விளைவாக 150 டொன் இன்ஜின் ஒயில் டினிப்ரோ ஆற்றில் கலந்துள்ளதாகவும், இதனால் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.