சூரியவெவ பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றச் செயலாளர் 50,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சூாியவெவவில் வாராந்த சந்தையை நடத்திச் சென்ற ஒருவருக்கு செலுத்தப்படவிருந்த 24 லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்குவதாயின், 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாகத் தர வேண்டும் என குறித்த நபர் கோரியுள்ளாா்.
இதனையடுத்து, தகவலை அறிந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு அதிகாரிகள் அவரைக் கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.