கொழும்பில் இன்று, போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர உள்ளிட்ட 10 பேருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, டீன்ஸ் வீதி மற்றும் டி.பி, ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு, அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று போராட்டம் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்த, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) தலைவர், மதுஷன் சந்திரஜித், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனத்தின் (IUBF) தலைவர், கன்வீனர் உட்பட 13 நபர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.