இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் விபரம் வெளியானது

நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் 21 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் நேற்று பூரணமாக குணமடைந்துள்ளனர்.

ஐ.டி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வௌியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

மேலும் 432 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir