மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்தனர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

கடற்படைப் பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இதுவரை 790 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 1991 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir