பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும் – டயானா கமகே

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார்.

இன்றைய குழந்தைகளுக்கு பால்நிலை பற்றிய உண்மையான அறிவு கிடையாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும், சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன? எனத் தெரியாது எனவும், சில குழந்தைகள் இந்த விடயம் பற்றித் அறிந்திராததால், அவர்களுக்குத் தெரியாமலே பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் தம்மைப் பற்றி கூறிய கருத்துக்களை நிராகரித்த கமகே, இந்த எம்.பி.க்களின் நிலைமையை அனைவரும் விரைவில் பார்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply