இந்தியாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெறவுள்ள உலக அழகி போட்டி!

இந்தியா, 27 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை நடத்த உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய 71வது உலக அழகி போட்டியை இந்தியா நடத்தவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்த ஆண்டே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டி நடைபெறும் திகதி மற்றும் இடம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை நடத்தியது. அந்த ஆண்டு ரீட்டா ஃபரியா என்பவர் மூலம் உலக அழகி பட்டத்தையும் இந்தியா வென்றது.

130க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்தியாவில் கூடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலம் நடைபெறும் இப்போட்டியில், போட்டியாளர்களின் சிறப்பைக் கண்டறிய பல போட்டிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உலக அழகி போலந்து நாட்டைச் சேர்ந்த கராலினா பிலாவ்ஸ்கா (Karolina Bielawska) இவ்வருடம் இடம்பெறவுள்ள உலக அழகி போட்டியை விளம்பரப்படுத்த இந்தியா சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை, 71வது உலக அழகி இறுதிப்போட்டியை இந்தியா நடத்துவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கராலீனா கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply