வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தசாப்தம் கடந்தும் தீர்வின்றி அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த வலியுறுத்தலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் தீர்வை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.