சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதோடு, திருமண பதிவுகளின் எண்ணிக்கையிலும் சரிவு நிலை காணப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி,கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமண பதிவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய கொரோனா சூழ்நிலையாலே இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முந்தைய ஆண்டுகளை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவின் சிவில் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள இணையத்தள தரவுகளின் அடிப்படையில் அறியமுடிகின்றது.
மேலும், 2021ஆம் ஆண்டில் 7.52 ஆக காணப்பட்ட திருமணப் பதிவு வீதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, கடந்த மாதம் தொடக்கம் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவும், திருமணத்தை ஊக்குவிப்பதற்காகவும், மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், 20 க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.