பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டு விரிவான அரசியல் கூட்டணியை உருவாக்க உள்ளதாக டளஸ் அழகப்பெரும அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கூட்டணியின் ஊடாக ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி அரசாங்கத்தை தோற்கடிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிரணிகள் செயற்படும் விதத்தில் மாத்திரமே நாட்டின் அரசியல் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணியை உருவாக்குவது அவசியம் என்ற தெளிவான நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது மற்றவர்களுக்கு தேவையான வகையில் செயற்படுவது அல்ல எனவும், நாட்டு மக்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது அவருடன் இணைந்து செயற்படுவதா அல்லது இருவருடன் செயற்படுவதா என்பதல்ல.
கொள்கைகளுக்கு இணங்கி அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பெரிய கூட்டணியை உருவாக்கி அரசாங்கத்தை தோற்டிக்க வேண்டும். இதுதான் தமது நடவடிக்கையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கங்களின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால், தாங்கள் பெரிய அணி எனவும் தங்களிடம் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு அணியினர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் எதிர்க்கட்சியில் பல அணிகள் இருக்கின்றன எனவும் சரித்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.