செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம், உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவானது உலகில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் எனத் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி தொடர்பில் ஆச்சரியங்கள் அதிகரிப்பதாக தெரிவித்த ரிஷி சுனக், அமெரிக்கா, சீனாவை அடுத்து பிரித்தானியா தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், அது தொடர்பில் தாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.