இந்திய – சீன எல்லையில் உருவாகும் பாரிய நீர் மின் திட்டம்!

இந்திய – சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் பாரிய நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்திய மத்திய அரசு நடத்தும் NHPC லிமிடெட் அஸ்ஸாம் மற்றும் அருஞ்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் சுபன்சிரி லோயர் திட்டத்திற்கான சோதனைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கும் எனவும் அதன் முதல் கட்ட பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள், எட்டு அலகுகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தேவையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு விரைவாகத் தீர்வு காணும் திறனுடன் கூடிய நீர் மின்சாரம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் இடைவிடாத உற்பத்தி அதிகரித்து வருவதால், கட்டணத்தை சமநிலைப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply