ஐ.சி.சி உலக கிண்ணத்தின் தகுதிச் சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியானது நேற்றைய தினம் நெதர்லாந்து அணியுடன் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடியுள்ளது.
இப் பயிற்சிப் போட்டியில், 215 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 45.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.
நெதர்லாந்து அணி சார்பாக சாகிப் சுல்பிகர் 54 ஓட்டங்களையும் டெஜா நிடமானுரு 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் கசுன் ராஜித 3 இலக்குகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
215 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 37.1 ஓவர்களில் 7 இலக்குகளை இழந்து 215 ஓட்டங்களை அடைந்து வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பாக அணி தலைவர் டசுன் சானக 67 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார்.