எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை! – கருணா

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை  பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ,”எமது அரசாங்கத்தினது வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளே இவை. எனவே நாம் இவை அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறுவோம்”  என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir