பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்- செயல்திட்டம் முன்னெடுப்பு

“பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” -என்ற செயல்திட்டத்தின் கீழ், ஹட்டனிலிலுள்ள அன்மையிள் கரிட்டாக்ஷனஸ் செட்டிக் நிறுவன மண்டபத்தில், ஊடகவியலாளர் சந்திப்பொன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர், அருட்தந்தை நியூமன் பியூரிஸ் அடிகளார், மௌலவி யாசின், பெருந்தொட்ட இணைப்பாளர் நிக்கலஸ், அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு வருடங்களை பூர்த்தியாகியுள்ள நிலையிலே, அவர்களுடைய கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், காணி, வீட்டுரிமை, கலாசாரம் போன்றவற்றிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெறுமனே கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களின் உரிமைக்காக போராடுகின்ற நிகழ்வாகவும், 200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சி செய்து இறந்து போன  உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுகளாகவும் இவை மாற வேண்டும் எனவும், தோட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்து காணி உரிமை பெற்றவர்களாகவும், வீட்டுரிமை பெற்றவர்களாகவும் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள நாம் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் அந்த ஓடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply