மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த நபர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீனிகம தேவாலயத்திற்கு அருகில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, குறித்த நபர் தனது வாகனத்தை ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸார் குறித்த நபரை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ரத்கம பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் “ரத்கம விதுர” என்ற புனைபெயரில் இயங்கும் போதைப்பொருள் பிரபுவின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.