உலகிலேயே மிக அதிகமான வெப்பமான கண்டமாக ஐரோப்பா கண்டம் மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடலின் மேற்பரப்பு அதிக வெப்பநிலைகளுக்குள்ளாகும் எனவும், பனிப்பாறை உருகுதல், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்படுவதோடு, ஒரு சில பிரதேசங்களில் ஏற்பட்ட கடுமையான வறட்சி, அதிக வெப்பநிலை மற்றும் புயல் என்பவற்றின் தோற்றத்திற்கு இதுவே காரணமாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.