ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன படைகள் துருப்புக் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் ஏவுகணைகளை வீசியது.
குறித்த தாக்குதலில் , ஏழு இஸ்ரேலிய வீரர்களும் எல்லை பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீனிய ஆணையம் இந்தத் தாக்குதல் மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் ஏறக்குறைய 161 பாலஸ்தீனியர்களும், 21 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.