வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் அண்டனி பிளின்கன்-ஷி ஜின்பிங்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் 05 வருடங்களின் பின்னர் சீனாவிற்கு சென்றுள்ளமையால், இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து நேற்றைய தினம் கலந்துரையாடியுள்ளார்.

சீன ஜனாதிபதியை சந்திக்கப்போவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்திருந்த போதும் இந்த சந்திப்பு நிச்சயமற்ற நிலையிலேயே நீடித்தது.

நீண்ட இழுபறிக்கு பின்னரான இந்த சந்திப்பில், இரு நாடுகளையும் பாதிக்கும் பொருளாதார விவகாரங்கள், அமெரிக்க தகவல்கள் திருட்டு தொடர்பாக சீனா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply