சீனாவில், மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஊடாக புகையிரத பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடியில் 6 ஆவது மற்றும் 8 ஆவது தளத்தின் ஊடாக புகையிரத பாதைகள் அமைக்கப்பட்டு அதன் ஊடகவே தினமும் புகையிரதங்கள் சென்று வருகின்றன.
இந்த அடுக்கு மாடிகளூடான ரயில் பாதை சீனாவின் மலை நகரம் என அழைக்கப்படும் சுன்கிங் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அடுக்குமாடி புகையிரத தொழில்நுட்பம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அதுமட்டுமன்றி, அந்த கட்டடத்தில் புகையிரத நிலையமும் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் புகையிரத பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட போது அங்கு இடப்பற்றாக்குறை நிலவியிருந்தது.
அதன் காரணமாக பொருளியலாளர்கள் வித்தியாசமாக சிந்தித்து 19 மாடி கட்டிடம் ஊடாக ரயில் பாதையை உருவாக்கியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதி ஊடாக புகையிரதம் செல்வதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, சைலென்சிங் டெக்னோலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகையிரதம் செல்லும் சத்தம் மக்களுக்கு கேட்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தற்போது அதி நவீன புகையிரத தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.
சீனாவில் தான் உலகின் முதல் தண்டவாளங்கள் இல்லாமல் ரயில் செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.