போதைக்கு அடிமையான பிக்குவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில்  பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.

சோதைனையின்போது அவரது கையில் இருந்த திருவோடு போன்ற பாத்திரத்தினுள் 40 மில்லிகிராம் ஹெரோயினும், 200 மில்லி கிராம் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த பௌத்த பிக்கு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அதேவேளை , தான் ஒரு நோயாளி என்றும், அபராதத் தொகையொன்றை விதித்து தன்னை விடுவிக்குமாறும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் அபராதத்துடன் விடுவித்தால் அது பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்ட கோட்டை நீதவான் நீதிபதி திலின கமகே , குறித்த பிக்குவை பொருத்தமான புனர்வாழ்வு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு உட்படுத்திய பின்னரே விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply