இந்திய சினிமாவில் பெரிய ஆளாக இருப்பவர்கள் பிரபலமாகி முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவது சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் எந்த பதவிக்கும் வரலாம், அதில் தவறு ஏதும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், மக்களுக்காக தொண்டாற்றிய பின்னர் ஆட்சி பற்றிய கனவு இருக்க வேண்டும்.
சினிமாவில் இருக்கும் பிரபலத்தை வைத்துக் கொண்டு முதலமைச்சராகி விடலாம் என்ற எண்ணம் தற்போது நிலவுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் நடிகராக, இயக்குனராக அவர்கள் வேலையை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியலுக்கு வந்து விடுகின்றனர்.
அந்த மாதிரியான எண்ணங்கள் இல்லாமல் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் வந்தால் வரவேற்பேன்.
முற்போக்கான சிந்தனையுடன் களமிறங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு தேவையான ஒன்றாக இருக்கிறது சினிமா.
ஆனால் அதே பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் நுழைவது வேதனை என தெரிவித்துள்ளார்.