ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தலையில் சுட்டுக் கொல்ல வேண்டுமென நாடாளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தின் போதே மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட அவகாசம் வழங்கியதன் பின்னர் இவ்வாறு சுட்டுக் கொல்ல வேண்டுமென கோரியுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை இலங்கையிலும் கொண்டுவர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.