மாயமான டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் முடிவடையவுள்ள ஒக்சிஜன்!

விபத்துக்குள்ளாகிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடும் போது காணாமல் போன ஐந்து பேரை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள  ஒக்சிஜன் அமெரிக்க நேரப்படி இன்று காலை 7.00 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 4.30) தீர்ந்து விடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

18ஆம் திகதி அமெரிக்க நேரப்படி காலை 8:00 மணியளவில் செயின்ட் ஜானுக்கு தென்கிழக்கே 400 மைல் தொலைவில் இந்த நீர்மூழ்கி கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பிறகு, டைட்டன் கப்பல் பிரதான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் ஷாஜதா தாவூத், அவரது 19 வயது மகன் சுலைமான், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், ஓஷன் கேட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர் பால் ஹென்றி நார்ஜோலெட் ஆகியோர் இந்த நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்துள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அதிக சத்தம் வரும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதன் இருப்பிடம் இன்னும் கண்டறியப்படவில்லை.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் 12,500 அடி ஆழத்திற்குச் செல்லக்கூடிய பல நீர் மூழ்கி கப்பல்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்தாலும், அதை கடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வர பல மணி நேரம் ஆகும் என அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply