அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

அமெரிக்காவின் உணவு உற்பத்தி நிறுவனங்களான Upside Foods மற்றும் Good Meat ஆகிய நிறுவனங்கள் செயற்கை இறைச்சியை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தன.

இதனையடுத்து, ஆய்வினை மேற்கொண்டு உறுதி செய்த பின்னர், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோழி, மாடு போன்றவற்றின் உயிரணுக்களில் இருந்து நேரடியாக ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதியளித்த இரண்டாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாடு, கோழி ஆகியவற்றின் கலங்களை பிரித்தெடுத்து அவற்றுள் சில சத்துப்பொருட்களை கலந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் என Upside Foods நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply