சீமெந்து விலை குறைப்பு!

இன்றைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் சீமெந்தின் பெறுமதி 20 வீதத்தால் அதிகரித்திருந்த போதிலும், 50 கிலோ கிராம் சீமெந்து பக்கெட் ஒன்றின் விலை கடந்த மாதம் 150 ரூபவால் குறைவடைந்திருந்தது.

விலை உயர்வானது கட்டுமானத் தொழிலை பாதித்துள்ளதுடன் சுமார் 100,000 கட்டுமான தொழிலாளர்கள் நேரடியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில விதிமுறைகள் இருக்க வேண்டும். நாங்கள் பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியபோது, ​​இன்றைய விலையைப் பொறுத்தவரை சில நிறுவனங்களிடம் இருந்து சீமெந்து வாங்கப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த சீமெந்தின் விலையை குறைக்கலாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் குறைந்த விலையில் சீமெந்தினை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளதுடன் அதன்படி 400 – 500 ரூபா வரை சீமெந்தின் விலை குறைக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply