உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா மாறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருவதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியாவின் பாதுகாப்புத் துறை, விமான போக்குவரத்து துறை வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்திய நிறுவனங்கள் பயணிகள் விமானங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கும் போது, அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.