நிவாரண உதவித் திட்டம் தொடரில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை நிவாரண உதவித் திட்டத்தில் முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்குவதாக நம்புவதாக தெரிவித்த பிரதமர், உண்மையான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

பொது மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும், குறைந்த வருமானம் பெறுவோரும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மானியங்களை இழக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதேவேளை, கடந்த 23ஆம் திகதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், உண்மையான வறிய மக்கள் பெருமளவானோர் நிவாரணத் திட்டத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply