மெக்ஸிகோவில் வெள்ளை சோள இறக்குமதிக்கு 50 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், மரபணு மாற்றப்பட்ட சோளத்தின் இறக்குமதியை தடுப்பதற்காகவுமே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மெக்ஸிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பானது இந்த ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெக்ஸிகோவிற்றும், கனடா மற்றும் அமெரிக்கா இடையில் மரபணு மாற்றப்பட்ட சோளம் தொடர்பில் வர்த்தக ரீதியில் சர்ச்சை நிலவுகின்ற நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோ அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உணவுகளில் வெள்ளை சோளத்தையும் உள்வாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.