ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் பதிலடி!

இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்த ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதாவது, இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் தான் பேசியிருந்தால் இதுகுறித்து விவாதித்திருப்பார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அனைவரும் முயற்சி செய்வோம் என்ற கொள்கையுடன் தனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு சமுதாயத்துக்கு எதிராகவும் பாகுபாடு காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல கருத்து தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது எனவும், இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி ஜோ பைடனும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்களின் இந்த பேட்டிக்கு முன்னதாகவே முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நேர்காணல் வழங்கியிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply