ஜூன் மாதத்தின் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் மொத்தமாக 61,183 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இலங்கை தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, ஜூன் 21 – 30 காலப்பகுதியில், இலங்கை 26,338 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதன்படி, தினசரி சராசரி வருகை 2,633 ஆகக் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், 2023 ஜனவரி 1 முதல் ஜூன் 20 வரையில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 585,669 ஆகக் காணப்படுகின்றது.

ஜூன் மாதத்தில் இதுவரை சராசரி வருகை 3,059 ஆக இருந்தது. ஜூன் முதல் வாரத்தில், இலங்கைக்கு 19,365 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், மேலும் இரண்டாவது வாரத்தில் அது 20,541 ஆக அதிகரித்தது. மூன்றாவது வாரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து 20,986 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கான மிகப்பெரிய சுற்றுலாப் போக்குவரத்தை உருவாக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஜூன் மாதத்தில் மொத்த வருகையில் 28 சதவீத பங்களிப்பை இந்தியா அளித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு, மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 9 சதவீதத்தைக் கொண்டுள்ளது.அதேசமயம் மூன்றாவது இடத்தில் உள்ள ஐக்கிய இராச்சியம், மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 7 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான நான்காவது தரவரிசையில் அவுஸ்திரேலியா  இருக்கும் அதே வேளையில், சீனா ஐந்தாவது இடத்தில் உள்ளது.அவ்வாறே, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, மாலைத்தீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply