சனத் நிஷாநாதவுக்கு எதிரான மனு விசாரணை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோரால் இந்த வழக்கு இன்று  காலை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இராஜாங்க அமைச்சரின் அவதூறான அறிக்கை அடங்கிய வீடியோ பதிவை ஆய்வு செய்தமை தொடர்பான சாட்சியங்கள்  சட்டத்தின் கீழ் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். .

இதன்படி, இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 23 ஓகஸ்ட் 2022 அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அரகலய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதில் நீதவான்கள் செயற்பட்ட விதம் தொடர்பில், விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம், நீதித்துறையின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக இராஜாங்க அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித் குமார மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply