அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில்  அதிகரித்த வெப்பம் 

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் டெக்சாஸில் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவானதால், மக்கள் வீடு மற்றும் பொதுவெளிகளில் உள்ள நீச்சல் குளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இதனையடுத்து, அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் ஜூலை 4ம் தேதி வரை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டெக்சாஸில் உள்ள பிக் பெண்ட் தேசிய பூங்காவில் 119 பாகை பாரன்ஹீட் வெப்பநிலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுவன், அதிகரித்த வெப்பநிலையால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply