ஜப்பானில் உள்ள ஒகினாவ துறைமுகம் இரத்தச் சிவப்பு நிறமாக மாறியுள்ளமையானது அங்கு குடியிருக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று, உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் இடம்பெற்றதாகத் ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அருகிலுள்ள மதுபான தொழிற்சாலையில் கசிவு ஏற்பட்டமையாலேயே குறித்த துறைமுகம் சிவப்பாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மதுபானக் கசிவினால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த மதுபான தொழிற்சாலையினர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மதுபான ஆலையின் குளிரூட்டும் அமைப்பில் ஒன்றிலிருந்து தோன்றியதாக நம்பப்படும் கசிவு, மழைநீர் வழிந்தோடும் கால்வாய் வழியாக ஆற்றில் கசிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கசிவு எப்படி ஏற்பட்டது? என்பதை நிறுவனம் விசாரித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.