கடந்த ஜூன் மாதத்துக்குள் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த வருடத்தின் அரை ஆண்டுக்குள் இதுவரை 6 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கடந்த வருடம் முழுவதும் 7 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுவதாக அமைகின்றது.