ஆப்கானிஸ்தானில் அழகுக் கலை நிலையங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதுவரைகாலமும், பெண்கள் பாடசாலை, கல்லூரிகளுக்குச் செல்லவும், பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலைக்குச் செல்லவும் தடைவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தற்போது பெண்கள் அழகு நிலையங்கள் நடாத்துவதற்குத்  தடைவிதித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சின் ஊடக பேச்சாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைக்குக் கொண்டுவந்து, பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, பலரும் தமது ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply