கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியதுடன் தொடர்புடைய காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பேருந்து உரிமையாளர், பேருந்துக்கான காப்புறுதிப் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக வேண்டுமேன்றே திட்டமிட்டு குறித்த தீ விபத்து அரங்கேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும்,அங்கு பேருந்திலிருந்த பெறுமதியான பாகங்கள் மற்றும் உதிரிபாகங்கள் அகற்றி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கழற்றப்படட் உதிரிபாகங்கள் அனைத்தும் ஒரு அறையினுள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், பேருந்தின் என்ஜின் அதிக வெப்பமடைவதற்கான கருவி பொருத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,பேருந்து தீ விபத்து தொடர்பான விசாரணைகள் மேலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.