ஆரம்பமானது ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் விவாதம்!

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிதிருந்தார்.

எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதில் திருத்தங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்படும் எனவும், விவாதத்தின் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply