தேசிய லொத்தர் சபை NLB மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை DLB ஆகிய இரண்டு சபைகளும் மேற்கொண்ட தீர்மானத்தின்படி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் MJPஅதிஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட அதிக செலவுகளை சமாளிக்கும் முயற்சியின் அடிப்படையிலேயே அதிஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் ரூ. 20 முதல் ரூ. 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக NLB தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விலை உயர்வடைந்தாலும், இது நுகர்வோரின் வெற்றி வாய்ப்புகளையும் அதிகரிக்கின்றது என NLB விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் மெனுர சதுரங்க இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை,அதிஷ்ட இலாப சீட்டு விநியோகஸ்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இலங்கை அதிஷ்ட இலாப சீட்டு விநியோகஸ்தர்கள் சங்கம், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தமது கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.