எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளால் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தேசிய விவசாயக் கல்விக் கண்காட்சியை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், உத்தேச நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டில் 800,000 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசி ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மிகப்பெரிய தொகையாகும்.
மேலும் ஜனவரி முதல் இறுதி வரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த 800,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இந்த வருடம் இதுவரையில் ஒரு நெல்மணியை கூட இறக்குமதி செய்யவில்லை. கடந்த இலாப் பருவத்திற்கும், பிரதான பருவத்திற்கும், 2023 ஆம் ஆண்டுக்கான இரசாயன உரங்களையும் விவசாயிகளுக்கு அரசாங்கம் பல சலுகைகளையும் வழங்கியது.
அதிகப்படியான அரிசியைப் பயன்படுத்துவது பற்றி பரந்த அளவில் சிந்திக்க வேண்டியது அவசியம் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசி வகைகளின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று அமைச்சர் மேலும் கூறினார்.