அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இவ்வருடத்தில் மாத்திரம் 2,138 டெங்கு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், குருந்துவத்தை பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அடுத்த 2 வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வைத்தியர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply