
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 31 நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை வழங்கவுள்ளன.
ரஷ்யாவுடனான யுத்தம் முடிவுற்றதும் நேட்டோவில் உக்ரைன் இணையலாம் என்ற அறிவிப்பை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பதற்கு துருக்கி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாகவே குர்தீஷ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக கூறி நேட்டோவில் இணைய விடாமல் ஸ்வீடனுக்கு துருக்கி ஆதரவு வழங்கவில்லை. எனவே, துருக்கியின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து ஸ்வீடனை ஆதரிக்க துருக்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.