கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து நிறுவனங்களால் தொடங்கப்பட்ட ஒரு ஆய்வில், 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 783 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவை, இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், 2030 க்குள் பசியை முடிவுக்கு கொண்டுவரமுடியாது எனவும், நிலையான வளர்ச்சியின் இலக்கினை அடையமுடியாது எனவும் எச்சரிக்கின்றது.