எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்படும் என குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தனது டுவிட்டர் தளத்தில், 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.