அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அசைவுக்குள்ளாகின.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 9.3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், அலாஸ்காவில் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1964 ஆம் ஆண்டு அலாஸ்காவில் 9.2 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஏற்பட்ட சுனாமியில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.