கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருந்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று காலை கஞ்சாவை விற்க முற்பட்டபோது மன்னார் நகர்பகுதியில் வைத்து மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை திருடி விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் பல வருடங்களாக அரங்கேறிவருகின்ற நிலையில் அவற்றுள் ஐஸ் போதை பொருளும் திருடி விற்பனை செய்யப்பட்டு அதற்கு பதிலாக அஜினாமோல்ட் கலந்து வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply