வாக்கெடுப்பு கடமையில் கவனயீனமாக நடந்த 32 தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருட தடை

2020 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தலில் ஒருமீட்டர் இடைவெளி பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,மற்றும் தொற்றுநீக்கி களால் கைகளை சுத்தம்செய்தல் போன்ற மூன்று பிரதான விடயங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படவேண்டு மென்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஏற்பாடு தொடர்பான விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த விசேடகூட்டத்தில் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்,சசீலன்,மேலதிக அரசாங்க அதிபரும் தேர்தல்கள் கட்டுப் பாட்டுப்பிரிவின் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,முறைப்பாட்டுபிரிவின் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி நவரூப ரஞ்சனி,போக்குவரத்து பிரிவின் உதவி தெரிவத்தாட்சி அலு வலருமானஎம்.எஸ்.பசீர்ஆகியோரோரல் இத்தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தெளிவூட்டப்பட்டது.

இங்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்,சசீலன், கருத்து வெளியிடுகையில் கடந்ததேர்தலில் வாக்கெடுப்பு நிலைய கடமையில் கவனயீனமாக நடந்த 32 தலைமைதாங்கும் தேர்தல்கடமை உத்தியோகத் தர்கள் ஐந்து வருடங்களுக்கு தேர்தல் கடமையில் இணைத்துக் கொள்ளாத வாறுதேர்தல் கடமை தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் இத்தேர்தலிலும் இந்த தவறுக்கு இடமளிக்கப்படக்கூடாதெனவும் அறிவிப்பு செய்தார்.

மேலும் மாற்று திறனாளிகள்வாக்களிக்க போக்குவரத்து வசதிசெய்ய முன் கூட்டியே வைத்திய அத்தாட்சிப்பத்திரம் சமர்பிக்குமாறு பிரதேச மட்ட தேர் தல் ஏற்பாடுஉத்தியோகத்தர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டனர், தேர்தலுக்கு மறுநாள் ஆறாம்திகதி இரவு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடஎதிர்பார்க்கப்படுவதாகவும்அன்றையதினம்காலைஎட்டுமணிக்கேவாக்குகள்எண்ணும்பணிகள்ஆரம்பிக்கப்படும் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள்மறுநாள் ஏழாம்திகதியே நடைபெறும் எனவும் இங்கு தெரிவிக் கப்பட்டது

அத்துடன் பிரதான வாக்கெண்ணும் உத்தியோகத்தர்களின்கடமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பிரிவுக்கான கடமைகளுக்கு மேலதிகமாக இம் முறை அக்கடமைகளை செய்ய பிரதேச செயலாளர்களும் பொறுப்பேற்றுள் ளனர் சுகாதாரவழிமுறைகளுக்கமைய தேர்தலை நடாத்தும் விசேட வழி காட்டல்கள் அடங்கிய அறிவுறுத்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது சட்டமாக்கப்பட்டதும் தேர்தல்கள் ஆணையகம் திணைக்களத்துக்கு சமர்பிக்கும் இதன்பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப் படுமென்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்,சசீலன்,தெரிவித்தார்.

பிரதேச மட்ட தேர்தல் ஏற்பாடு குழுவின் உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள் ,கிராமசேவையாளர்நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்தகூட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அதற்கான கட்டிட மற்றும் வசதிகளை ஏற்படுத்த எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றுக் கான தீர்வுகளும் கலந்துரையாடப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir