கட்டணம் செலுத்தாமல் ஹெலியில் சுற்றிய மைத்திரி

மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும் பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார்.

இதில் 557 ​ஹெலிகொப்டர் பயணங்களுக்கும் எந்தவிதமானக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பத்திரிகை ஒன்று இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொண்டதில் தெரியவந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதி முக்கிய பிரமுகருக்கான ஹெலிக்​கொப்டர்களே, இலங்கை விமானப் படையால் வழங்கப்பட்டுள்ளது.

சராசரியாக வருடமொன்றுக்கு 111 தடவைகள் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம் அதாவது ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277.17 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளார்.

557 ​ஹெலிகொப்டர் பயணங்களுக்கும் எந்தவிதமானக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை. இந்தப் பயணங்களுக்கான காரணங்களை விமானப்படைத் தலைமையகம் வழங்கவும் இல்லை.

புவியின் சாராசரி சுற்றளவு 40,030.17 கிலோமீற்றராகும். மைத்திரி பயன்படுத்திய ஹெலிகொப்டர் பயணங்களின்படி அவரால் மூன்று தடவைகள் பூமியின் மத்தியரேகை வழியாக உ​ல​கை சுற்றி வந்திருக்க முடியும் என கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir