சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜக்கிய மக்கள் சக்தி அனுசரணையுடன் கையளித்துள்ளது.
ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று பிற்பகல் சபாநாயகரிடம் பிரேரணையை கையளித்தனர்.
சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக ஜெயவர்தன தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கு ரம்புக்வெல்ல பொறுப்பேற்பார் என பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட பிறகு உத்தரவு புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.
இதேவேளை, குறித்த பிரேரணை மீதான மூன்று நாள் விவாதத்திற்கு கூட தயார் என அமைச்சர் ரம்புக்வெல்ல சபையில் தெரிவித்தார்.
விவாதத்தின் போது நான் நிறைய வெளிப்படுத்த வேண்டும் என ரம்புக்வெல்ல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.